அடிமை பழனிச்சாமி.. அதிமுக கட்சி… ரெய்டு என்னாச்சி.? முதல்வர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி.!
நீங்கள் (பாஜக) நினைப்பது போல் உங்கள் ரெய்டுக்கு பணியும் கட்சி திமுக இல்லை. உங்கள் உருட்டல் மிரட்டலுக்கு திமுகவினர் பயப்பட மாட்டோம். – மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் விமர்சனம்.
தமிழக முதல்வர் தற்போது ஒரு வீடியோ பதிவு மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்தும், பாஜக – அதிமுக மீதான விமர்சனங்களையும் முன் வைத்து தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோ பதிவில் அதிமுக பற்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தில் அடிமை பழனிச்சாமி தலைமையில் அதிமுக எனும் கட்சி இருக்கிறது. அந்த கட்சியை கொத்தடிமையாக மாற்ற கடந்த 2016, 2017 2018இல் இதே போல ஆட்சியில் இருந்த பாஜக பல்வேறு ரெய்டு நடத்தினார்கள். அதன் மூலம் எந்த வழக்காவது நடந்ததா.? முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்களா.?. முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார்கள் குறித்து குற்றப்பத்திரிகையை நாங்கள் தருகிறோம். அமலாக்கதுறை விசாரணை நடத்த முன் வருவார்களா.? என கேள்வி எழுப்பினார்.
மேலும், இப்படிப்பட்ட ஊழல் பெருச்சாளிகளை தான் மத்திய அமைச்சர் அமித் ஷா டெல்லியில் சந்தித்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கொத்தடிமை கூட்டமாக அதிமுகவை மாற்றுவதற்கு பாஜக முயற்சி மேற்கொண்டதன் காரணமாக, தற்போது பாஜக காலடியில் அதிமுக இருக்கிறது. எனவும் , 2021 வரை அதிமுக தான் ஆட்சியில் இருந்தார்கள் அப்போதே ஏன் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
4 ஆயிரம் கோடி டெண்டர் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி மீது சிபிஐ விசாரிக்க அனுமதி அளித்த பின்னர், உடனடியாக உச்சநீதிமதின்றதிற்கு தடை வாங்கியவர் பழனிசாமி எனவும், செந்தில் பாலாஜியை விமர்சிக்க அவருக்கு எந்த அருகதையும் இல்லை என காரசார விமர்சனத்தை முன்வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
நீங்கள் (பாஜக) நினைப்பது போல் உங்கள் ரெய்டுக்கு பணியும் கட்சி திமுக இல்லை. உங்கள் உருட்டல் மிரட்டலுக்கு திமுகவினர் பயப்பட மாட்டோம். நாங்கள் கலைஞரால் வளர்க்கட்டப்பட்டவர்கள். இந்த விவகாரத்தை அரசியல் களத்தில் எதிர்கொள்வோம் என தனது விடியோவில் மிகவும் காரசாரமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை! pic.twitter.com/MTA0suBkSh
— M.K.Stalin (@mkstalin) June 15, 2023