தமிழிசையா.? பொன்னாரா.? அண்ணாமலையா.? யார் வந்தாலும் ஆதரிக்கிறோம்.! சீமான் பேச்சு.!
2024 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக தமிழரை அறிவித்தால் ஆதரிக்கிறோம் என சீமான் கூறியுள்ளார்.
முன்னதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வந்து கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகையில் தமிழர் ஒருவர் வருங்காலத்தில் பிரதமராக வேண்டும் எனவும் அதற்காக பாஜக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என பேசியிருந்தார்.
இந்த கருத்து குறித்து நேற்று கன்னியாகுமரியில் நாம் தமிழகர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார் ,’ 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமித்ஷா கூறியது போல தமிழரை பிரதமர் வேட்பாளராக அறிவியுங்கள் நாங்கள் எல்லாம் ஆதரித்து வாக்களிக்கிறோம். யார் தமிழிசையா, பொன் ராதாகிருஷ்ணனா.? அல்லது அண்ணாமலையா யார் என அறிவியுங்கள் நாங்கள் வாக்களிக்கிறோம்.’ என சீமான் பேசியிருந்தார்.