கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து.!
கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேசவிமான நிலையத்திற்குள் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேசவிமான நிலையத்தின் 3C புறப்பாடு முனைய கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. நேற்றிரவு 9:20 மணியளவில் பாதுகாப்பு சோதனைக்கு அருகில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து, இரவு 9.40 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்நிலையில், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, இந்த தீ விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. ஆனால் உரிய விசாரணைக்கு பிறகே சரியான காரணம் தெரியவரும்.
தீ விபத்தின் போது, விமான நிலையம் முழுவதும் கரும் புகை சூழ்ந்ததால் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டதாகவும், அச்சத்தில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.