550 கோடி மோசடி.! முன்னாள் காவல்துறை அதிகாரி கைது.! வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர்களுக்கு நோட்டீஸ்.!
ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிண்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த என்.எல்.எஸ் ஐ.எப்.எஸ் எனும் நிதி நிறுவன,மானது வாடிக்கையாளர்களிடம் 6-10 சதவீதம் வரையில் அதிக வட்டி தருவதாக கூறி மோசடியில் ஈடுப்பட்டனர்.
சுமார் 84,000 ஆயிரம் பேரிடம் இருந்து 5,400 கோடிரூபாய் மோசடி செய்து வட்டி, அசல் என கொடுக்காமல் இருந்துவந்துள்ளனர். இதனை தொடர்ந்து எழுந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை மேகொண்டு, அந்த நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்களை கைது செய்தனர்.
ஏற்கனவே வெங்கடேசன் என்பவரை ஒரு மாதத்திற்கு முன்பு கைது செய்து இருந்த நிலையில் தற்போது முன்னாள் காவல் துறை அதிகாரி ஒருவரை கைது செய்துள்ளனர். அவர் மூலமாக மட்டும் சுமார் 550 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த நிதி நிறுவன முக்கிய இயக்குனர்கள் வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாகவும், அவர்களை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.