மணிப்பூரில் தொடரும் கலவரம்.. பெண் அமைச்சரின் வீடு தீ வைத்து எரிப்பு.!
மணிப்பூர் கலவரத்தில் பெண் அமைச்சர் வீடு தீவைத்து கொளுத்தப்பட்டது.
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும் மற்றும் குக்கி சமூகத்தினருக்கும் இடையேயான கலவரமானது கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் பெரும்பாலானோர் பாதுகாப்பு தேடி முகாம்களின் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.
நேற்று (புதன்கிழமை) அதிகாலை 1 மணி அளவில் இம்பால் கிழக்கு மாவட்ட பகுதிகளிலும், காங்போபி மாவட்டம் காமன்லோக் பகுதிகளிலும் குக்கி இன மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர் 10 பேர் படுகாயமடைந்தனர்.
அதே நேரத்தில் லாம்பெல் மாவட்டத்தில் குக்கி இனத்தை சேர்ந்த மணிப்பூர் பெண் அமைச்சர் நேம்சா கிப்ஜெனின் வீட்டிற்கு சில மர்ம நபர்கள் தீவைத்து எரித்தனர். நல்ல வேலையாக அப்போது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்னும் கலவரம் ஓயாத காரணத்தால் மணிப்பூர் மாவட்டத்தில் 11 மாவட்டத்தில் ஊரடங்கு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான இடங்களில் இணைய சேவை முடக்கமும் இன்னும் தொடர்கிறது.