ஆஹா…93 மணி நேரத்திற்கும் மேலாக சமைத்து உலக சாதனை படைத்த பெண்…குவியும் பாராட்டுக்கள்.!!
26 வயதான நைஜீரியவை சேர்ந்த ஹில்டா பாசி என்ற பெண் 93 மணி நேரம் 11 நிமிடங்களுக்கு இடைவிடாமல் சமைத்து நீண்ட நேரம் தனியாக சமையல் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் இந்திய சமையல் கலைஞரான லதா டோண்டன் 87 மணி 45 நிமிடங்களில் சாதனை படைத்திருந்ததை ஹில்டா பாசி தற்போது முறியடித்துள்ளார்.
மே 11 வியாழன் அன்று தொடங்கி மே 15 திங்கட்கிழமை வரை தொடர்ச்சியாக சமையல் செய்துள்ளார். சமையலறையில் 100 பானைகளுக்கு மேல் உணவை சமைத்தார். இதன் மூலம் ஹில்டா பாசி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து, பலரும் அவருக்கு தங்களுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
ஹில்டா 100 மணிநேரம் சமையல் செய்து சாதனையைப் படைக்க முயன்றார், இருப்பினும், முயற்சியின் ஆரம்பத்தில் தனது ஓய்வு இடைவேளைகளில் ஒன்றுக்கு அவர் தவறுதலாக கூடுதல் நிமிடங்களை எடுத்துக் கொண்டதால், அவரது இறுதி மொத்தத்தில் கிட்டத்தட்ட 7 மணிநேரம் கழிக்கப்பட்டது.
அனைத்து ‘நீண்ட மராத்தான்’ பதிவுகளைப் போலவே, பங்கேற்பாளர் ஒவ்வொரு தொடர்ச்சியான மணிநேர நடவடிக்கைக்கும் ஐந்து நிமிட ஓய்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கின்னஸ் சாதனை படைத்த ஹில்டா “நைஜீரிய உணவு வகைகளை வரைபடத்தில் வைக்க” தான் இந்த சாதனையை முயற்சித்ததாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.