கிரிக்கெட் வீரர்கள் இப்படிசெய்வது கேவலமானது… கம்பிர் காட்டம்.!
கிரிக்கெட் வீரர்கள் பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பது கேவலமானது என்று கம்பிர் விமர்சித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள் இது போன்று பான் மசாலா (புகையிலை) விளம்பரங்களில் நடிப்பது கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாதது, இது கேவலமாக பார்க்கப்படுகிறது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர், கவுதம் கம்பிர் விமர்சனம் செய்துள்ளார். கம்பிர் தனியார் செய்திக்கு அளித்த பேட்டியில் அவரிடம் கிரிக்கெட்டர்கள் பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பது பற்றி கேட்கப்பட்டது.
அப்போது பேசிய கம்பிர், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் நீங்கள் பிரபலமாகிவிட்டால் உங்களை இந்த உலகம் உற்று கவனித்துக் கொண்டிருக்கும். தவிர கோடிக்கணக்கான குழந்தைகள் உங்களை பின்பற்றுவார்கள். இதனால் நீங்கள் இது போன்ற விளம்பரங்களில் நடித்து ஊக்குவித்தால் உங்களை பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், கபில்தேவ் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோர் புகையிலை நிறுவனங்களுக்காக பான் மசாலா விளம்பரங்களில் நடிப்பது குறித்து கம்பிர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கிரிக்கெட்டில் நீங்கள் வளர்ந்துவிட்டால் புகழ் வருவதுடன் பொறுப்புணர்வும் இருக்கவேண்டும்.
புகையிலை விளம்பரங்களில் முன்னிலை படுத்துவதைவிட, பணத்தை ரொம்ப முக்கியப்படுத்தக்கூடாது. உங்களை ரோல் மாடலாக கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு, இது போன்ற செயல்களால் நீங்கள் தவறான முன்னுதாரணமாக அமைந்து விடக்கூடாது. சச்சின் டெண்டுல்கர், இது போன்ற பான் மசாலா விளம்பரங்களுக்காக 20 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை தட்டிக்கழித்துள்ளார்.
சச்சின் தன்னால் தனது ரசிகர்கள் தவறான பாதைக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக, தன் தந்தையிடம் செய்த சாத்தியத்திற்காகவும் அவர் இது போன்ற விஷயங்களில் ஊக்குவிப்பதில்லை. இதனால் தான் அவர் உண்மையில் அனைவருக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார். நானும் கடந்த 2018இல் டெல்லி அணி கேப்டனிலிருந்து விலகிய போது, எனக்கும் 3 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கோரப்பட்டது, நான் நிராகரித்துவிட்டேன் என கம்பிர் கூறியுள்ளார்.