பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கு.. நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

Nagercoil Kashi

பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கில் கைதான காசிக்கு ஆயுள் தண்டனை விதித்தது நாகர்கோவில் நீதிமன்றம்.

பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைதான நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை வழங்கி விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம நாகர்கோவிலை சேர்ந்த காசி (வயது 27), பல பெண்களை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக வழக்கு தொடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக 2020ல் கைது செய்யப்பட்ட காசி, பின்னர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 120 பெண்களின் 400 வீடியோக்கள் மற்றும் 1900 ஆபாச படங்கள் காசியின் லேப்டாப்பிலிருந்து கைப்பற்றப்பட்டன. இந்த நிலையில், பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்