ஹீரோயின்களை தொட்டால் அவ்வளவுதான்…மகள்களுக்கு சுத்தமா பிடிக்காது… சுந்தர் சி ஓபன் டாக்.!!
இயக்குனர் சுந்தர் சி தற்போது தலைநகரம் 2 திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. எனவே, படத்தின் ப்ரோமோஷன் பணியில் இயக்குனர் சுந்தர் சி ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், படத்தின் ப்ரோமோசனுக்காக பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சுந்தர் சி ஹீரோயின்களுடன் ரோமன்ஸ் செய்தால் தனது மகள்களுக்கு பிடிக்காது என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய சுந்தர் சி “நான் தலைநகரம் முதல் பக்கத்தில் நடித்த போது என்னுடைய மகள் ரொம்ப சிறிய பொண்ணு. ஒரு 5 வயது இருக்கும் என்னுடைய மூத்த மகளுக்கு அப்போது, தலைநகரம் படம் வெளியான போது அதில் சில காட்சிகளில் ஹீரோயின்களை பிடிப்பது போல காட்சிகள் இருக்கும்.
அந்த படத்தை பார்த்த போது என்னுடைய மகள் “ஐயோ ச்சீ அப்பா” எதற்கு அவுங்கள தொடுறாங்க என கேட்பார். அப்போதிலிருந்து இப்போது வரை என்னுடைய மகள்களுக்கு ஹீரோயின்களை தொட்டாலே பிடிக்காது. ஹீரோயின்களை தொட்டால் அவ்வளவுதான்” என கூறியுள்ளார்.
மேலும், இயக்குனர் சுந்தர் சி தலைநகரம் 2 திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அரண்மனை 4 படத்தை அவரே இயக்கி அவரே நடித்து வருகிறார். படத்தில் அவருடன் இணைந்து யோகி பாபு, ராஷி கண்ணா, கோவை சரளா., ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.