சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அறையில் அமலாக்கத்துறை அதிகாரி ஆலோசனை…!
சென்னை முதனமை நீதிமன்ற நீதிபதி அல்லி அறையில், அமலாக்கத்துறை வழக்கறிஞர் ரமேஷ் ஆலோசனை
அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரியவந்துள்ளது;அவருக்கு பை பாஸ் சர்ஜரி செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னை முதனமை நீதிமன்ற நீதிபதி அல்லி அறையில், அமலாக்கத்துறை வழக்கறிஞர் ரமேஷ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாவிட்டால் மருத்துவமனையில் கைது செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.