தள்ளிப்போகும் அவதார் பாகங்களின் ரிலீஸ் தேதிகள்…சோகத்தில் ரசிகர்கள்.!!

Avatar movies

உலகம் முழுவதும் மக்கள் பலரும் வியந்து பார்க்கும் ஒரு திரைப்படம் எதுவென்றால், அவதார் என்றே கூறலாம். முதல் பாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்ற நிலையில், அதனுடைய இரண்டாவது  பாகம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற்றது.

இந்த நிலையில், அவதார் திரைப்படம் மொத்தமாக 5 பாகங்களாக வெளியாகும் என படத்தின் இயக்குனர் முன்னதாக அறிவித்திருந்தார். எனவே, அவதார் படத்தின் 3-வது பாகம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதைப்போல அதனுடைய அடுத்தடுத்த பாகங்கள் அடுத்தடுத்தசில ஆண்டுகளில் டிசம்பர் மாதம் வெளியாகும் என கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது  ‘அவதார்’ திரைப்படங்கள்  தாமதமாக வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி,  ‘அவதார் 3’ டிசம்பர் 19, 2025 க்கும், ‘அவதார் 4’ டிசம்பர் 21, 2029 க்கும், ‘அவதார் 5’ டிசம்பர் 19, 2031 ஆண்டும் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்