வைகைப்புயல் உடன் குத்தாட்டம் போட்ட ஏஜென்ட் டினா.! வைரலாகும் வீடியோ…
கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் ஏஜென்ட் டினாவாக நடித்த வசந்தியின் நடன வீடியோ ஒன்று இணையதளத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அது வேற ஒன்றும் இல்லை, நம்ம வைகைப்புயல் வடிவேலு உடன் நம்ம ஏஜென்ட் டினா நடனம் ஆடியுள்ளார்.
வடிவேலு காமெடி கதாபாத்திரத்தில் நடித்த ‘மனதை திருடிவிட்டாய்’ படத்தில் வரும் காட்சியில், எங்க அப்பா வாசிக்க…எங்க அம்மா ஆட…நானும் எங்க அண்ணனும் வேடிக்கை பார்க்க ஒரே கூத்தா இருக்கும் என்ற காமெடி கட்சியில் வரும் மேளத்துக்கு தற்போது, வைகைப்புயல் உடன் ஏஜென்ட் டினா குத்தாட்டம் போட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. வடிவேலு கடைசியாக “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்போது, மாமன்னன் மற்றும் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த இரு படங்களில் படப்பிடிப்பின்போது தான், ஏஜென்ட் டினா வைகைப்புயல் வடிவேலுவை நேரில் சந்திருக்கிறார். அப்போது, நடனம் ஆடியபோது இந்த எடுத்த வீடியோ தான் இந்த வீடியோ ஆகும்.