ஒரு குவாட்டருக்கு 100 ரூபாய்… பல்லாயிரக்கணக்கான கோடி கொள்ளை.! சரமாரி குற்றசாட்டுகளை முன் வைக்கும் இபிஎஸ்.!
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு குற்றசாட்டுகளை செய்தியாளர்களிடம் கூறினார்.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகம், தலைமை செயலக அறை என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இன்று அதிகாலை அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து செல்ல முற்பட்டனர். தற்போது அவர் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான இந்த நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் திமுக பற்றியும், செந்தில் பாலாஜி மீதான வழக்குகள் பற்றியும் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார்.
அவர் கூறுகையில், செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக (அதிமுக ஆட்சியில்) இருந்த போது, பல பேரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றதாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. ஏற்கனவே அமலாக்கத்துறை இந்த புகார் குறித்து 4 ஆண்டுகள்முன்பே வழக்கு தொடர்ந்தார்கள். தற்போது எதுவும் புதியதாக வழக்கு ஏதும் போடவில்லை.
இதுகுறித்து உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பில் , 60 நாளுக்குள் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தான் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு அவர்கள் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளார்கள். இது இப்போது எடுத்த நடவடிக்கை இல்லை. ஏற்கனவே உச்சநீதிமன்றம் இதுகுறித்து தீர்பளித்துவிட்டது. இத்தனை காலம் வழக்கு நடைபெற்று வந்ததால் காலதாமதம் ஆனது.
அரசு டாஸ்மாக்கின் கீழ் 6000 கடைஉள்ளது. அதில் 4000 கடைகளுக்கு இன்னும் டெண்டர் முறையாக விடவில்லை. அனைத்து வருமானமும் திமுக மேலிடத்திற்கு செல்வதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. கடந்த 2 ஆண்டு காலத்தில் மட்டும் முறைகேடாக பார் நடைபெறுவது மூலமாகவும் , போலி மதுபானம், காலால் வரி செலுத்தாமல் மதுபானம் விற்பனை என ஒரு குவாட்டருக்கு 100 ரூபாய் கிடைக்கிறதாக செய்திகள் வெளியாகின.
டாஸ்மாக் கடைகள் மூலமாக மட்டுமே பல்லாயிரக்கணக்கான கோடி கொள்ளை நடைபெறுகிறது என குற்றம் சாட்டினார். அது போக ஒரு குவாட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி அது மொத்தமும், செந்தில் பாலாஜி மூலமாக முதலமைச்சர் குடும்பத்திற்கு சென்றதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒரு ஆடியோவில் பேசும் போது, 30ஆயிரம் கோடி வைத்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள் என பேசியிருந்தார் எனவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
மேலும், இத புகார்களை ஆளுநரிடம் தெரிவித்தோம். அதன் பிறகு, மத்திய அரசின் கீழ் செயல்படும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜியை சந்தித்து விட்டு பேசுகையில், செந்தில் பாலாஜி உத்தமர் போல பேசுகிறார். திட்டமிட்டு வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியாக குற்றம் சாட்டினார். தலைமை செயலகத்தில் அமைச்சர் அறையில் நடந்த ரெய்டு அதற்குரிய ஆதாரங்கள் காண்பிக்கப்பட்டு பின்னர் சோதனை நடைபெற்றதாக அவர் கூறினார். மேலும், முதல்வர் ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு என முதல்வர் பேட்டியையும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.