செந்தில் பாலாஜி கைது! ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த மனைவி.. இன்று பிற்பகலில் விசாரணை!
செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவை இன்று பிற்பகலில் விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மனைவி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். செந்தில் பாலாஜி மனைவி மேகலா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் அமர்வில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக அமலாக்கத்துறை கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் , செந்தில் பாலாஜி கைது தொடர்பாக எந்த நோட்டீசும் வழங்கப்படவில்லை என வழக்கறிஞர்கள் குற்றசாட்டியுள்ளனர்.