நடிகர் விஜய் சேதுபதியின் மகனா இது..? நல்லா வளர்ந்துட்டாரே…வைரலாகும் புகைப்படம்.!!

Vijay Sethupathi's Son Surya pic

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஆளே வளர்ந்து பெரிய பையனாக மாறியுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி அவருடன் சிந்துபாத் திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்.

Vijay Sethupathi's Son Surya
Vijay Sethupathi’s Son Surya [Image Source : Twitter/@kayaldevaraj]

அந்த திரைப்படத்தில் மிகவும் சிறியவராக இருந்திருப்பார். இதனை படத்தை பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக தெரியும். அந்த படத்தை தொடர்ந்து சூர்யா சேதுபதி நானும் ரவுடி தான் படத்திலும் சிறிய வயது விஜய் சேதுபதியாக நடித்திருப்பார். இந்த படங்களில் சிறிய பயனாக அவரை நாம் பார்த்திருக்கிறோம்.

Vijay Sethupathi's Son Surya
Vijay Sethupathi’s Son Surya [Image Source : Twitter/@kayaldevaraj]

ஆனால், தற்போது ஆளே நன்றாக வளர்ந்து சூர்யா சேதுபதி மிகவும் ஸ்டைலாக மாறிவிட்டார். அவர் தனது தந்தை விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் விஜய் சேதுபதி அளவிற்கு அவருடைய மகன் வளர்ந்துள்ளது தெரிகிறது.  இதோ அந்த புகைப்படம்…

Vijay Sethupathi his son Surya Sethupathy.
Vijay Sethupathi his son Surya Sethupathy. [Image Source : Twitter/@Chrissuccess]

மேலும், வைரலாகி வரும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அடடா…விஜய் சேதுபதி மகனா இது..? நல்லா வளர்ந்துட்டாரே எனவும், மேலும் சிலர் நீங்கள் ஹீரோவாக படங்களில் நடிக்கலாம்” எனவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Vijay Sethupathis son ViduthalaiPart2
Vijay Sethupathis son ViduthalaiPart2 [Image Source : Twitter/@CinemaWithAB]

மேலும். விஜய் சேதுபதி மற்றும் அவருடைய மகன் இருவரும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை 2 படத்திலும் ஒன்றாக நடித்துள்ளார்கள். படப்பிடிப்பு கூட இருவரும் இருக்கும் புகைப்படங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்