செந்தில் பாலாஜி கைது! முதலமைச்சர் இல்லத்தில் அவரச ஆலோசனை!

MK Stalin

சென்னையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இல்லத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை.

அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். செந்தில் பாலாஜியை சந்திக்க திமுக அமைச்சர்கள் மருத்துவமனை சென்று வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி கைதால், தமிழக்கத்தில் கரூர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வரும், மருத்துவமனை சென்று செந்தில் பாலாஜியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். செந்தில் பாலாஜி கைது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட செய்ய திமுக அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்