Tamil News Live Today: மீண்டும் மணிப்பூரில் வன்முறை துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலி
மணிப்பூரின் காமென்லோக்கில் கிராமத்தில் நேற்று இரவு நடந்த வன்முறை சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மணிப்பூரின் காமென்லோக் கிராமத்தில் நள்ளிரவு 1 மணியளவில் அதிநவீன ஆயுதங்களுடன் நுழைந்த கலவரக்காரர்கள் குண்டுவீச்சு மற்றும் கண்முடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.இந்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
குகி பழங்குடிமற்றும் மெய்த்தி சமூகத்தினரிடையே ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக பதற்றம் நிலவி வரும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளுக்கு மத்தியில் இந்த சம்பவம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.