அமைச்சர் செந்தில் பாலாஜி கைது : எய்ம்ஸ் மருத்துவ அறிக்கைக்கு பிறகு அமலாக்கத்துறை அடுத்தகட்ட நடவடிக்கை.!
எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணை தொடர்பாக அமலாக்கத்துறை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உள்ளது. .
அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்படுகையில் நெஞ்சுவலி காரணமாக, தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெஞ்சுவலி காரணமாக தீவிர சிகிச்சை பெற்று அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணை குறித்து, அமலாக்கத்துறை அடுத்தகட்டமாக, எய்ம்ஸ் மருத்துவர்களை அழைத்துள்ளனர். அவர்கள் இன்று காலை 11 மணியளவில் ஓமந்தூரார் மருத்துவமனை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் அமைச்சர் உடல்நிலையை ஆய்வு செய்து அறிக்கை அளித்த பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜியை டெல்லிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த அமலாக்கத்துறையினர்திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.