அமைச்சர் செந்தில் பாலாஜியை ஒரு நாள் முழுக்க துன்புறுத்தி இருக்கிறார்கள் – திமுக வழக்கறிஞர் பேட்டி
அமைச்சர் செந்தில் பாலாஜியை ஒரு நாள் முழுக்க துன்புறுத்தி இருக்கிறார்கள் என்று திமுக வழக்கறிஞர் பரந்தாமன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜின் வீடு , தலைமை செயலக அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சுமார் 18 மணிநேரம் சோதனை நடத்தி பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்து அழைத்து செல்லப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள்ளார். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை ஒரு நாள் முழுக்க துன்புறுத்தி இருக்கிறார்கள் என்று திமுக வழக்கறிஞர் பரந்தாமன் பரபரப்பு ஒன்றை பேட்டி அளித்துள்ளார்.
அதாவது, திமுக வழக்கறிஞர் பரந்தாமன் செந்தில் பாலாஜி கைது குறித்து பேசுகையில், நேற்று காலையில் இருந்தே செந்தில் பாலாஜியின் முகத்தை கூட காட்டவில்லை. செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் சட்டப்படி அணுகுவோம் என்று கூறியதோடு, அமலாக்கத்துறையினர் சட்டப்படி செந்தில் பாலாஜியை கைது செய்யவில்லை என்றும், அவரது குடும்பத்தினருக்கு கூட தகவல் தெரிவிக்கவில்லை என்று கடுமையாக சாடியுள்ளார்.