விமானத்தின் காக்பிட்டுக்குள் பெண் நண்பரை அழைத்து வந்த இரண்டு விமானிகள் மீது நடவடிக்கை..!

Air India Cockpit

டெல்லி-லே செல்லும் ஏர் இந்தியா விமானத்தின் காக்பிட்டுக்குள் ஒரு பெண்ணை அழைத்து வந்ததற்காக இரண்டு விமானிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து லே செல்லும் எஐ-445 விமானத்தின் கட்டுப்பாடு அறைக்குள் (காக்பிட்) அனுமதியின்றி பெண் நண்பர் ஒருவரை விமானிகள் அழைத்து வந்துள்ளனர். இதனையடுத்து கட்டுப்பாடு அறைக்குள் பெண் பயணி அனுமதி இன்றி வந்தது தொடர்பாக, கேபின் குழுவினர் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு இரு விமானிகள் மீதும் ஏர் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பதில் அளித்த சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ), இந்த விவகாரம் குறித்து அறிந்திருப்பதாகவும், இதற்கு முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கு ஏர் இந்தியா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வரவில்லை. ஆனால், விரிவான விசாரணைக்காக ஏர் இந்தியா ஒரு குழுவை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில், துபாயிலிருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தின் காக்பிட்டிற்குள் தனது பெண் நண்பரை அழைத்து வந்த ஏர் இந்தியா விமானியின் உரிமம் ரத்து  செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்