சயனைடு கலந்த மதுவை குடித்த 2 பேர் உயிரிழப்பு..! உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு…!
மயிலாடுதுறையில் சயனைடு கலந்த மதுவை குடித்து 2 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொல்லப்பட்டறை வைத்து இருக்கும் 55 வயதான பழனி குருநாதன் மற்றும் அங்கு வேலை செய்து வரும் 65 வயதான பூரசாமி ஆகியோர் நேற்று அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் இரு மதுபாட்டிகள் வாங்கி ஒரு பாட்டிலை குடித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களுக்கு உடலநலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அருகிலே இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு இருவரும் உயிரிழந்துவிட்டனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கூறுகையில், சயனைடு கலந்த மதுபானத்தை இருவரும் குடித்தது உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், இருவரின் உடலையும் வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து ஈடுபட்டுள்ளனர்.