36 கிலோ புற்றுநோய் கட்டி.! அறுவை சிகிச்சை மூலம் பெண்ணின் உயிரை காப்பாற்றிய நீலகிரி மருத்துவர்கள்.!
36 கிலோ புற்றுநோய் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி பெண்ணின் உயிரை நீலகிரி மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
நீலகிரியை சேர்ந்த தமிழ்செல்வி எனும் 45வயது பெண்மணி கர்ப்பப்பையில் புற்றுநோய் கட்டி வளர்ந்துள்ளது. இந்த கட்டியை நீலகிரி மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி அந்த பெண்னின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
சுமார் 36 கிலோ எடையுள்ள அந்த புற்றுநோய் கட்டியை நீலகிரி மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர், கிட்டத்தட்ட அந்த பெண்ணின் எடையில் பாதி எடை புற்றுநோய் கட்டி இருந்துள்ளது. மருத்துவர்கள் நான்கரை மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டியை அகற்றியுள்ளனர் தற்போது அந்த பெண் உடல் நலமாக இருக்கிறார்.