சாய் சுதர்சன் அதிரடி பேட்டிங்..! கோவை கிங்ஸ் 179 ரன்கள் குவிப்பு..!
டிஎன்பிஎல் தொடரில் இன்றைய LKK vs ITT போட்டியில், முதலில் பேட் செய்த கோவை கிங்ஸ் 179/6 ரன்கள் எடுத்துள்ளது.
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இதில் திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
இதன்படி, கோவை கிங்ஸ் அணியில் முதலில் களமிறங்கிய சச்சின் மற்றும் சுரேஷ்குமார் ஆட்டமிழக்க, சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி ரன்கள் எடுத்தார். அவருடன் இணைந்து முகிலேஷ் பொறுப்பாக விளையாடிய நிலையில் விக்கெட்டை இழந்தார். ஆனால் சுதர்சன் அரைசதம் கடந்து அசத்தினார்.
முடிவில், கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 86 ரன்களும், முகிலேஷ் 33 ரன்களும், ஷாரு கான் 25 ரன்களும் குவித்துள்ளனர். திருப்பூர் தமிழன்ஸ் அணியில் விஜய் சங்கர் 3 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.