ஊடக வதந்திகளை நம்பி ‘வாண்டடா வந்து வண்டில ஏறி விட்டீர்களே! – நாராயணன் திருப்பதி

narayanan

உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்களை தவிர வேறு யாரேனும் தி மு க தலைவராகவோ, ஆட்சிக்கு வந்தால் முதல்வராகவோ முடியுமா? என நாராயணன் திருப்பதி ட்வீட்.  

மேட்டூர் அணையை திறந்துவைத்த பின் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி மீது மத்திய உள்துறை அமித் ஷாவுக்கு என்ன கோபமோ என்று தெரியவில்லை. தமிழ்நாட்டை சேர்ந்தவர் பிரதமராக வர வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்தை வரவேற்றார். தமிழர் பிரதமரானால் மகிழ்ச்சி தான்.

2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் எல்.முருகன் ஆகியோருக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கலாம் என நம்புகிறேன் என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தமிழக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உங்கள் நம்பிக்கைக்கு நன்றி. பாஜகவில் கடைநிலை தொண்டன் கூட நாட்டின் பிரதமராக வர முடியும் என்பதை தான் அமித்ஷா கூறினார் என்பது கூட தெரியாமல் ஊடக வதந்திகளை நம்பி ‘வாண்டடா வந்து வண்டில ஏறி விட்டீர்களே!

உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்களை தவிர வேறு யாரேனும் தி மு க தலைவராகவோ, ஆட்சிக்கு வந்தால் முதல்வராகவோ முடியுமா? அமித்ஷா சொன்னதின் அர்த்தம் இப்போது ஊடகங்களுக்கும் மற்றவர்களுக்கும் புரிந்திருக்கும் என நான் நம்புகிறேன்.’ என விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்