“எடப்பாடி பழனிசாமிதான் பிரதமர் வேட்பாளராக வர வாய்ப்புள்ளது -அதிமுக எம்.பி தம்பிதுரை
ஈபிஎஸ் தான் பிரதமர் வேட்பாளராக வரவேண்டும் என்றுஅதிமுக எம்.பி தம்பிதுரை பேட்டி.
கிருஷ்ணகிரியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அதிமுக எம்.பி தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தை சேர்ந்தவர் பிரதமராக வரவேண்டும் என்று பேசியது தமிழகத்திற்கு பெருமை. அதிமுக பாஜக கூட்டணியில் உள்ளது.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று முன்னாள் முதலமைச்சர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பெயர் வைத்தார். அதிமுக நாடு முழுவதும் பரவ வேண்டும். ஒரு தமிழன் இந்தியாவை ஆள்கின்ற வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் எம் ஜி ஆர் இந்த பெயரை வைத்தார். தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து வருகிறோம்.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் பிரதமராக மாட்டார்களா என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. அதிமுக எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த எண்ணத்தை செயல்படுத்தப்படுகிறது தற்போது இபிஎஸ் தான் உள்ளார். எனவே ஈபிஎஸ் தான் பிரதமர் வேட்பாளராக வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.