டிஎன்பிஎல் இன்று தொடங்குகிறது… கோவை, திருப்பூர் அணிகள் இடையே முதல் போட்டி.!

Kovai-Tirupur

டிஎன்பிஎல் தொடரின் இன்றைய முதல் போட்டியில் கோவை மற்றும் திருப்பூர் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் போன்றே நடத்தப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 7-வது சீசன் இன்று தொடங்கி ஜூலை 12 வரை நடைபெறுகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் கோவை, திண்டுக்கல், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு ஊர்களில் உள்ள மைதானங்களில் நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் முதல் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகளிடையே தொடங்குகிறது. இதில் கடந்த முறை சாம்பியன்களில் ஒரு அணியான கோவை அணி இன்று திருப்பூர் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளின் முழு விவரம் பின்வருமாறு,

ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி: பால்சந்தர் அனிருத், என்.எஸ்.சதுர்வேத், அல்லிராஜ் கருப்புசாமி, விஜய் சங்கர், ராஜேந்திரன் விவேக், எஸ்.கணேஷ், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், எஸ்.அஜித் ராம், திரிலோக் நாக், கே.விஷால் வைத்யா, எஸ்.ராதாகிருஷ்ணன், துஷார்சுவாமி, ரஹேஜா, பெர் எஸ். மணிகண்டன், ஜி. பி புவனேஸ்வரன், ராகுல் ஹரிஷ், முகமது அலி, ஜி பார்த்தசாரதி, எம் ராகவன், ஐ வெற்றிவேல்

லைகா கோவை கிங்ஸ் அணி: சாய் சுதர்சன், யு முகிலேஷ், ராம் அரவிந்த், எஸ் சுஜய், ஜே சுரேஷ் குமார்(W), ஷாருக் கான்(C), எம் முகமது, கே கௌதம் தாமரை கண்ணன், கிரண் ஆகாஷ், ஜாதவேத் சுப்ரமணியன், மணிமாறன் சித்தார்த், ஆர் திவாகர், வள்ளியப்பன் யுதீஸ்வரன், அதீக் உர் ரஹ்மான், பி ஹேம்சரண், கேஎம் ஓம் பிரகாஷ், பி வித்யூத்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்