TNPL2023: டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு..!
டிஎன்பிஎல் தொடரின் இன்றைய முதல் போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு.
ஐபிஎல் போன்றே நடத்தப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 7-வது சீசன் இன்று தொடங்கி ஜூலை 12 வரை நடைபெறுகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் கோவை, திண்டுக்கல், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு ஊர்களில் உள்ள மைதானங்களில் நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் முதல் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள், கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இந்நிலையில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.