தேநீருடன் ரஸ்க் சாப்பிடும் பழக்கம் உள்ளவரா நீங்கள்..? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு…!

rask

அடிக்கடி தேநீருடன் ரஸ்க் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க  விளைவுகள்.

பொதுவாகவே நம்மில் பெரும்பாலானோர் தேநீருடன் எதாவது ஒரு நொறுக்கு தீனியை உண்பதை விரும்புவதுண்டு. அந்த  வகையில்,நம்மில் பெரும்பாலானோர் ரஸ்க்கை தேநீரில் தொட்டு சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் தான். இந்த சிற்றுண்டி பாதிப்பில்லாத ஒன்றாகத் தோன்றலாம். ஆனால், இந்த பாதிப்பில்லாத சிற்றுண்டியை தொடர்ந்து உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தில் சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

எடை அதிகரிப்பு 

weightloss
weightloss [Imagesource : representative]

உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்புபவர்கள், இந்த ரசிகை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அவை கலோரிகள் நிறைந்தவை. ஒரு ரஸ்கில் 40-60 கலோரிகள் வரை இருக்கலாம். எனவே இதனை தொடர்ந்து உட்கொண்டால் நமது உடல் எடையை அதிகரிக்க செய்யலாம்.

நீரிழிவு நோய் 

diabeties
diabeties [Imagesource : representative]

நீரிழிவு நோய் பிரச்னை உள்ளவர்கள், ரஸ்க்கை சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. இத்தகைய சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். ரஸ்க் பொதுவாக சுத்திகரிக்கப்பட்ட மாவில் தயாரிக்கப்படுகிறது. அதாவது அந்த உணவில் நார்ச்சத்து இருக்காது. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யலாம், இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வகை 2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.

செரிமான பிரச்னை 

digestive
digestive [imagesource : Representative]

ரஸ்க் பிஸ்கட்களில் பொதுவாக நார்ச்சத்து குறைவாக இருப்பதால் பசி மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது ஜீரணிக்க கடினமாக இருக்கலாம், வாயு பிரச்னை, மலச்சிக்கல் மற்றும் இரைப்பை குடல் புண்களை ஏற்படுத்தும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்