ஜனநாயகம் பற்றி எங்களுக்கு சொல்லாதீர்கள்… ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்.!
வாரிசு என்ற வார்த்தையாலும், கருணாநிதி குடும்பப் பெயராலும் தான் நீங்கள் இங்கே இருப்பதாக ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று வேலூரில் நடைபெற்ற பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றியிருந்தார். அதில் அமித்ஷா பேசும்போது தமிழகத்துக்கு பாஜக கடந்த 9 ஆண்டுகளில் என்ன செய்தது என்ற முதல்வர் ஸ்டாலின் கேள்விக்கு பட்டியலிட்டு விளக்கம் அளித்திருந்தார்.
இதற்கு கருத்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இன்று மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்து வைத்த பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், அமித்ஷா எனது கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என கூறியிருந்தார். முதல்வரின் இந்த கேள்விக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் ட்வீட் செய்துள்ளார்.
அவர் தனது ட்வீட்டில், வாரிசு என்ற வார்த்தையாலும், கருணாநிதி குடும்ப பெயராலும் தான் நீங்கள் தற்போதைய இடத்தில் இருக்கிறீர்கள். அதனால் ஜனநாயகம் பற்றி எங்களுக்கு நீங்கள் விளக்கவேண்டாம். இந்த ஜனநாயகத்தில் கடைமட்ட தொண்டன் கூட எங்கள் கட்சியில் எந்த பதவிக்கும் வரலாம் என்பதற்கு எங்கள் கட்சிதான் உதாரணம்.
ஆனால் உங்கள் கட்சியில் அடிப்படை உரிமை என்பது, கோபாலபுரம் வீட்டில் பிறக்கவேண்டும், அதை தான் நமது உள்துறை அமைச்சர் அமித்ஷா, உங்கள் குடும்பத்தை 3-G (3 தலைமுறை வாரிசு) என்று குறிப்பிட்டார்.
உலகின் பழமையான மொழியான தமிழ் மொழியை நம் மாநிலத்தை விட்டு தாண்டாத படி பார்த்துக்கொள்ளும் திமுக, தமிழுக்கு செய்யும் மிகப் பெரிய கேடு என்று அண்ணாமலை கூறியுள்ளார். நமது பிரதமர் மோடி, நம் தமிழை உலகம் முழுவதும் கொண்டு செல்கிறார், இப்பொழுதுதான் நம் மொழி உரிய கவனத்தையும் செழுமையையும் பெறுகிறது.
Thiru @mkstalin avargale,
I saw your response to our Hon HM Thiru @AmitShah avl’s speech in Vellore yday.
I would like to bring the following to your attention.
1. You are in this position because of the word ‘Dynasty’ and your surname ‘Karunanidhi’. Pls, don’t lecture us on…
— K.Annamalai (@annamalai_k) June 12, 2023