இந்திய வீரர்களுக்கு யோ-யோ பரிசோதனை முடிவு வெளியீடு..! யார் உள்ளே.? யார் வெளியே..!
பிசிசிஐ நிர்வாகம் இந்திய வீரர்களின் உடல்தகுதியை கருத்தில் கண்டு, வீர்களின் உடல்தகுதியை பரிசோதிக்க யோ-யோ உடற்தகுதி பேரிசோதனையை கட்டாயம் ஆக்கியுள்ளது. இதற்கான பரிசோதனை முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
முதலில் இங்கிலாந்து அயர்லாந்து செல்லும் வீரர்களுக்கு யோ-யோ பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டு பின்பு ஆப்கானிஸ்தான் உடன் ஆடும் அணிக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டது. இதற்கான பரிசோதனை சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் நடத்தப்பட்டது.
ஆப்கானிஷ்டன் உடன் ஆடும் போட்டியை அஜிங்க்யா ரஹானே வழிநடத்துகிறார். விராத் கோலி தொல்பட்டை வலியால் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளார். மேலும் பும்ரா, புவனேஸ்வர் குமார் இருவரும் காயம் காரணமாக விளையாடவில்லை.
பரிசோதனையில் ஒவ்வொரு வீரரும் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணான 16.1 ஐ பெற வெண்டும். இதில், தகுதி பெறாதவர்கள் வெளியேற்றப்பட்டு, தகுதி பெற்ற வீரர்கள் சேர்க்கப்படுவர்.
இந்நிலையில், யோ யோ பரிசோதனை மேற்கொண்ட வீரர்களுக்கு நேற்று முடிவு வெளியிடப்பட்டது. அதில் அனைத்து வீரர்களும் தேர்ச்சி பெற்றுவிட்டனர். காயம் காரணமாக விருதிமான் சஹா மட்டும் வெளியேறினார். அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா ஏ அணியில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பெருமையாக கூறிய சஞ்சு சாம்சன், தேர்ச்சி பெறாமல் வெளியேற்ற பட்டார். இதனால் கீப்பிங் செய்ய பாரத் முடிவு செய்யப்பட்டார். ஷ்ரேயாஸ் ஐயர், கருண் நாயர் இருவரும் இந்தியா ஏ அணியை வழிநடத்துகின்றனர்.
இதுவரை, இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் விராத் கோலி விளையாடுவார் என்பது உறுதியாகவில்லை. மருத்துவ ஆலோசனைக்கு பின்பே முடிவு எடுக்கப்படும்.
ஜூன் 14 ம் தேதி துவங்க இருக்கும் ஆப்கானிஸ்தான் அணியில் ஆடும் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, பெங்களுருவில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பங்களாதேஷ் அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணியும் பெங்களூருவில் பயிற்சியில் இணைந்தது.