sk ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்…’மாவீரன்’ 2வது சிங்கிள் எப்போது?
‘மாவீரன்’ திரைப்படத்தின் 2வது பாடல் குறித்த அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் மாடன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி கடைசியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில். படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5 வெளியாகும் என முன்னதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அது வேற ஒன்னும் இல்லை படத்தின் இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் எனபது குறித்து தான். இன்று மாலை அதன் தேதி வெளியாக உள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
இதற்கிடையில், மாவீரன் படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளதால் படத்தின் ப்ரோமோஷன் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay tuned..!⏳????#MaaveeranSecondSingle @Siva_Kartikeyan #Maaveeran#MaaveeranFromJuly14th #VeerameJeyam
A @bharathsankar12 musical!????????@madonneashwin @AditiShankarofl @iamarunviswa @DirectorMysskin #Saritha @suneeltollywood @iYogiBabu @vidhu_ayyanna @philoedit… pic.twitter.com/ltv81q5F7H
— Shanthi Talkies (@ShanthiTalkies) June 12, 2023