ஆளுநரை கண்டித்து ஜூன் 16-ல் திமுக ஆர்ப்பாட்டம்!
பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவை நடத்த ஆளுநர் தாமதப்படுத்துவதால் கண்டித்து போராட்டம் அறிவிப்பு.
பட்டமளிப்பு விழாவை தாமதப்படுத்தும் ஆளுநரை கண்டித்து ஜூன் 16-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை கண்டித்து திமுக மாணவரணி போராட்டம் நடத்த உள்ளது. திமுக மாணவர் அணி, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழ துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராததற்கும் எதிர்ப்பு தெரிவித்து, ஜூன் 16-ஆம் தேதி திமுக மாணவரணி போராட்டம் நடத்த உள்ளது.