அஜித்தை பின்பற்றும் மஞ்சு வாரியர்.! BMW பைக்கில் ரைட் சென்ற சூப்பர் கலெக்ஷன் இதோ…
மலையாள சினிமாவின் பிரபல நடிகையான மஞ்சு வாரியர், அஜீத் குமாருக்கு ஜோடியாக ‘துணிவு’ படத்தில் நடித்ததில் இருந்தே பைக் பிரியர் ஆகிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
அந்த வகையில், துணிவு படப்பிடிப்பின்போது, அஜித் மற்றும் அவரது பைக்கர் நண்பர்களுடன் மஞ்சு வாரியரம் லடாக் பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இதனை தொடர்ந்து, துணிவு திரைப்படம் ரிலீஸான பிறகு மஞ்சு வாரியர் ‘BMW WR1250 GS’ பைக்கை ரூ.28 லட்சம் கொடுத்து சொந்தமாக வாங்கினார். அவர் ஏற்கனவே மினி கூப்பர் மற்றும் ரேஞ்ச் ரோவர் கார்களை வைத்திருக்கிறார், ஆனால் இப்போது பைக்கையே அதிமாக விரும்புகிறார் போல் தெரிகிறது.
தற்போது, அஜித்தை போல் அவ்வப்போது பைக்கில் ரைட் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவரது பைக்கில் கருப்பு நிற ரைடர் உடையில் ரைட் செல்லும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.