பள்ளிகள் திறப்பு: பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ்.!
சென்னை விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இனிப்பு, மலர் கொடுத்து வரவேற்பு.
கோடை விடுமுறை முடிந்து 6 – 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடிய அரசு பள்ளியில் முதல் ஆளாக பள்ளிக்கு வந்த மாணவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பூக்கொடுத்து வரவேற்றார்.
மாணவர்களை தொடர்ந்து ஆசிரியர்களுக்கும் மகிழ்வோடு வரவேற்பு அளித்தார். மாவட்டந்தோறும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் சாலை எங்கும் பரபரப்பாக காணப்படுகிறது.