அமெரிக்காவில் மோடி ஜி சாப்பாடு.! இந்திய வம்சாவளியினரின் ஹோட்டல் அதிரடி அறிமுகம்.!
அமெரிக்காவில் ஒரு ஹோட்டலில் மோடி ஜி மீல்ஸ் என உணவு பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 22ஆம் தேதி அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு செல்ல உள்ளார். அங்கு அவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விருந்தளிக்க உள்ளார். மேலும் அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். அந்த கூட்டத்தில் உரையாற்றும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
நரேந்திர மோடியின் அமெரிக்க வருகையை முன்னிட்டு, பிரதமர் மோடி பெயரில் இந்திய வம்சாவளியினருக்கு சொந்தமான ஒரு ஹோட்டல் மோடி ஜி மீல்ஸ் (மோடி ஜி உணவுகள் ) என உணவு வகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை தயாரித்த ஹோட்டல் சமையல் ஊழியர் ஸ்ரீபாத் குல்கர்னிகூறுகையில், இந்த ‘மோடி ஜி தாலியில், கிச்சடி, ரஸ்குல்லா, சர்சன் கா சாக், காஷ்மீரி டம் ஆலு, இட்லி, தோக்லா, சாச் மற்றும் பப்பட் போன்ற உணவு வகைகள் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.