சென்னையில் பரபரப்பு.! அதிகாலையில் வணிக வளாகத்தில் தீ விபத்து.!
சென்னை சவுகார்பேட்டை வணிக வளாகத்தில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை சவுகார்ப்ட்டையில் முக்கிய வீதியில் அமைந்துள்ள தனியார் வணிக வளாகம் ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீ பிடித்தது. உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
ராயபுரம், எழும்பூர், அசோக் நகர் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். அதிகாலை நேரம் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த வித ஆபத்தும் நேரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அப்பகுதியில் ஏற்பட்ட மின்கசிவு தான் இதற்கு காரணம் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.