10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றே கடைசி நாள்.!
10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள இன்றே கடைசி நாள்.
தமிழகத்தில் கடந்த மார்ச் 13ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 3-ல் நிறைவுபெற்ற +2 தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில், மொத்தமாக 94.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவிகள் 96.38 சதவீதம் பேரும், மாணவர்கள் 91.45 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றனர்.
இதனை தொடர்ந்து, மாணவர்கள் அடுத்து தங்கள் கல்லூரி படிப்பில் செல்ல எதுவாக, மாணவர்கள் பயின்ற பள்ளியில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 12ம் தேதி வழங்கப்பட்டது. தற்போது, 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள இன்று வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
பெயர், பிறந்த தேதி, புகைப்படம் திருத்தம் செய்ய இன்று தான் கடைசி நாள் ஆகும். இதனை தவறவிட்டால் மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்ட பிறகு சான்றிதழில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்களது சான்றிதழில் ஏதெனும் மாற்றவேண்டும் என்றால் உடனே செல்லுங்கள்.
விரைவில், அசல் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருத்தம் தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் பள்ளி மாணவ மாணவியர் விவரங்களை அளிக்கலாம் என்று கூறப்பட்டு உள்ளது.