தமிழ்நாடு முழுவதும் இன்று 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.!

school reopens

தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்படுகிறது. 1-5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு கிடையாது. அவர்களுக்கு ஜூன் 14ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால், இன்று வர தேவையில்லை. இன்னும் 2 நாட்கள் விடுமுறையை ஜாலியாக கொண்டாடலாம்

சுமார் 40 நாட்களுக்கு மேல் விடுமுறையை ஜாலியாக கொண்டாடிய 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இன்று தங்களது புதிய வகுப்பில் அமர இருக்கின்றனர். மாணவர்கள் வருகையையொட்டி, ஏற்கனவே அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. ஆனால், கோடை வெயில் தாக்கம் காரணமாக பள்ளி திறப்புக்கு தாமதமானது. இந்நிலையில், மாணவர்களுக்கு கற்றல் சுமை இல்லாதவாறும், ஆசிரியர்களின் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாதவாறும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகள் திறக்கும் முதல் நாளான இன்று மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டு – புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் உள்ளிட்ட இலவச நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்