வாயு கசிவின் காரணமாக மூச்சுத்திணறி 6 பேர் உயிரிழப்பு..!

Default Image
உத்தரப்பிரதேச மாநிலம் பந்தாரா அருகேயுள்ள கோட்வா சக் பன்ஹலி கிராமத்தின் வீடு ஒன்றில் திடீரென ஏற்பட்ட வாயு கசிவின் காரணமாக தீப்பிடித்தது. இந்நிலையில் புகை மூட்டம் வீடு முழுவதும் சூழ்ந்திருந்த நிலையில் மூச்சுத்திணறி 6 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ”கோட்வா சக் பன்ஹலி கிராமத்திலுள்ள ராம்டாஜி தேவி என்பவரின் வீட்டில் விழா ஒன்று நடைபெற்ற போது திடீரென ஏற்பட்ட வாயு கசிவினால் தீப்பற்றியது.
இதனால் பதறிப்போன ராம்டாஜி தேவியின் குடும்பத்தார்கள் மற்றும் உறவினர்கள் தீயிலிருந்து தங்களை பாதுகாக்க வீட்டிலிருந்த அறை ஒன்றினுள் நுழைந்து கதவை பூட்டியுள்ளனர். இதனிடையே நெருப்பினால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் அறையிலிருந்த 6 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்களில் 4 பேர் பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் அடங்குவர்.
மேலும் மூச்சுத்திணறி மயக்கமடைந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்