டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் தோல்விக்கு இதுதான் காரணம்… ரோஹித் ஷர்மா.!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியாவிற்கு பயிற்சி செய்ய அவகாசம் இல்லை என தோல்விக்கு பிறகு ரோஹித் ஷர்மா பேச்சு.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடுவதற்கு முன்பாக இந்திய அணிக்கு பயிற்சி செய்ய போதுமான கால அவகாசம் இல்லை என்று தோல்விக்கு பிறகு அளித்த பேட்டியில் ரோஹித் கூறியுள்ளார். 2021-23 காலகட்டத்தில் நடந்த டெஸ்ட் தொடர்கள் மற்றும் புள்ளி பட்டியலில் அடிப்படையில் முதலிரண்டு இடம் பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டிக்கு முன்னேறின.
கடந்த ஜூன் 7ஆம் தேதி தொடங்கிய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து களம் இறங்கிய இந்தியா 296 ரன்களுக்கு ஆள் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 270 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேரம் முடிவில் வரை வலுவான நிலையிலேயே இருந்தது. இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கிய முதல் செஷனில் இந்திய அணி விக்கெட்களை இழந்து 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி முதல்முறையாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.
The first team to win all the ICC Men’s titles ????#WTC23 | #AUSvIND pic.twitter.com/wo1Y6la2Lx
— ICC (@ICC) June 11, 2023
இந்த தோல்விக்கு பிறகு பேசிய இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டிக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்கள் விளையாடாதது இந்திய அணிக்கு ஒரு பாதிப்பாக அமைந்து விட்டது. இந்த போட்டிக்கு முன்பாக 25 நாட்கள் நாங்கள் தயாராகி இருக்க வேண்டும், ஆனால் ஐபிஎல் தொடர் முடிந்து சில நாட்களில் இறுதிப்போட்டி நடந்ததால் எங்களுக்கு பயிற்சி செய்ய அவகாசம் கிடைக்கவில்லை என்று கூறினார்.
மேலும் இந்தடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி என்பது மூன்று போட்டிகள் தொடராக நடத்தி இருந்தால் அது சரியாக இருந்திருக்கும் என்று கூறியிருந்தார் மூன்று போட்டிகள் தொடராக நடத்தினால் அதிலிருந்து சாம்பியனை தேர்வு செய்வது முறையாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.