தமிழ் மொழிக்கு பிரதமர் மோடி பெருமை சேர்க்கிறார்… அமித்ஷா பேச்சு.!

Amithshah Vellore

புதிய பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவியுள்ளோம் வேலூர் கூட்டத்தில் அமித்ஷா பேச்சு.

பல்வேறு நிகழ்வுகளுக்காக தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வேலூரில் நடைபெற்ற பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அமித்ஷா, கடந்த 9 ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சி நடந்து வருவதாக கூறினார்.

தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் பேசிய அமித்ஷா, பிரதமர் மோடி நம் பாரதத்தின் பழமையான மொழிக்கு பெருமை சேர்த்து வருகிறார். உலகில் எங்கு சென்றாலும் திருக்குறள் பேசி, தமிழின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார், மேலும் சோழர்களின் செங்கோலை புதிய பாராளுமன்றத்தில் நிறுவியுள்ளோம் எனவும் அமித்ஷா தெரிவித்தார்.

முன்னதாக சென்னை கேளம்பாக்கத்தில் பாஜக நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனையில் அமித்ஷா, தமிழகத்தில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக 25 இடங்களில் வெல்ல இலக்கு நிர்ணயிப்போம் என கூறியிருந்தார். அதன்பிறகு, வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது அண்ணாமலையின் தலைமையில் தமிழ்நாட்டில் பாஜக 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெரும் நம்பிக்கை வருவதாக அமித்ஷா தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்