ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 6.2 என பதிவு.!
ஜப்பானின் ஹொக்கைடோவில் 6.2 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.2 மற்றும் 140 கிமீ (87 மைல்) ஆழத்தில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.