கேட்ச்சா இல்லையா… அவுட்டான பிறகு கில் பகிர்ந்த இன்ஸ்டா ஸ்டோரி.!
4ஆம் நாள் ஆட்டத்தில் கில்லின் சர்ச்சைக்குரிய அவுட்டுக்கு பிறகு, சுப்மன் கில் தனது இன்ஸ்டாவில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நான்காம் நாள் ஆட்டத்தின்போது இந்திய வீரர் கில் அடித்த பந்தை ஸ்லிப் திசையில் நின்ற கேமரூன் க்ரீன் பிடித்த கேட்ச் சர்ச்சையானது. பந்து தரையில் பட்டது போல் தெரியும், மூன்றாம் நடுவரும் பல கோணங்களில் பார்த்த பின் இது அவுட் என்று அறிவித்து விடுவார்.
இதற்கு கில் மற்றும் கேப்டன் ரோஹித் உட்பட அனைவரும் ஆச்சர்யத்திற்கு உள்ளாகினர். மூன்றாம் நடுவர் எப்படி இதனை அவுட் என்று அறிவித்தார் என அனைவரும் குழப்பத்தில் இருக்கின்றனர். ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தரப்பில் இது கேட்ச் இல்லை கூறிவருகின்றனர்.
நடுவரின் இந்த சர்ச்சைக்குரிய முடிவு குறித்து கில் தனது சமூக வலைதளத்தில் ஸ்டோரி பகிர்ந்துள்ளார். கில் தனது இன்ஸ்டாவில் மூன்றாம் நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ வின் முடிவுக்கு கைதட்டும் கிளாப் எமோஜி உடன் ஸ்டோரி பகிர்ந்துள்ளார்.
மேலும் கில் தனது ட்விட்டரில் இந்த கேட்ச் படத்தை பகிர்ந்து அதில் இரண்டு லென்ஸ் மற்றும் தலையில் கை வைக்கும் எமோஜியுடன் ட்வீட் செய்துள்ளார்.
????????????????♂️ pic.twitter.com/pOnHYfgb6L
— Shubman Gill (@ShubmanGill) June 10, 2023
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி இந்த கேட்ச் குறித்து கூறும்போது, விளையாட்டில் சில சமயம் இவ்வாறு நடப்பது உண்டு, ஆனால் இது ஒன்றும் சாதாரண போட்டி இல்லை, உலகக்கோப்பை டெஸ்ட் இறுதிப்போட்டி. அதனால் நீங்கள் விக்கெட்டா இல்லையா என்பதை ஆய்வு செய்ய கூடுதலாக நேரம் கூட எடுத்துக்கொள்ளலாம் என்று கூறினார்.