சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்ட மின்சார ரயில்.!

trainderailment BasinBridge

சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தடம் புரண்ட கடைசி 2 பெட்டிகள் ரயிலில் இருந்து கழற்றி விடப்பட்டன. மேலும், தடம் புரண்ட ரயில்பெட்டியை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் இல்லை. இதனால், சென்ட்ரல் – திருவள்ளூர் இடையே மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் இதே இடத்தில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School
GST Tax devolution State wise
Rahul kl Eng Series
vaikunda ekathasi (1)