தென் சென்னை பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா முக்கிய ஆலோசனை.!
தென் சென்னை பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு விமானம் மூலம் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா சென்னை வந்தார். நேற்று இரவு முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதனை தொடர்ந்து, இன்றுசென்னை கேளம்பாக்கத்தில் தென் சென்னை பகுதி பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை பகுதியில் பாஜக நேரடியாக களமிறங்க களப்பணி ஆற்றி வருகிறது இந்த விவரம் தொடர்பாக தான் தென் சென்னை பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என கூறப்படுகிறது.