பராமரிப்பு பணிக்காக இன்று 24 ரயில்கள் ரத்து.!
தென்கிழக்கு ரயில் பிராந்தியத்தில் 24 விரைவு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பஹநக பஜார் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் மொத்த இன்டர் லாக்கிங் அமைப்பும் மாற்றப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது.
மேலும், ஹவுரா-சிஎஸ்எம்டி கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.05க்கு பதிலாக மாலை 4.05 மணிக்கு ஹவுராவில் இருந்து புறப்படும். ஹவுரா-சிஎஸ்எம்டி (மும்பை) அஞ்சல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.20 மணிக்கு ஹவுராவிலிருந்து புறப்படும்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை SER தண்டவாளங்களை சரிசெய்வதற்காக குறைந்தது 40 ரயில்களை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. அண்மையில், ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கோரமாண்டல் எக்ஸ்பிரஸ், ஹாவுரா எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது நாட்டையே உலுக்கியது. இதனை தொடர்ந்து, இப்பொது அணைத்து ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.