சென்னை – கோடியக்கரை… 1000 கி.மீ படகு பயணத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி.!

sailingboattrip

பெண் காவலர்களுக்கான பாய்மர படகு பயணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெண் காவலர்களுக்கான பாய்மர படகு பயணத்தை இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்துள்ளார்.

அதில் ஒரு பகுதியாக சென்னை முதல் கோடியக்கரை வரை சுமார் 1,000 கி.மீ கடல் வழி துரம், 25 மகளிர் காவலர்கள் அடங்கிய குழு பயணம் செய்கின்றனர். பிறகு, கோடியக்கரையில் இருந்து ஜூன் 18ம் தேதி சென்னை வர உள்ளனர். இதுகுறித்து, உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், பொன்விழா காணும் மகளிர் காவல்துறையை போற்றும் விதமாக, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அவற்றின் ஒரு பகுதியாக 1000 கி.மீ கடல்வழி தூரத்தை மகளிர் காவலர்கள் அடங்கிய குழு பாய்மரப்படகுகள் மூலம் கடக்கவுள்ளது. அந்த சாகசப் பயணத்தை சென்னை துறைமுகத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தோம். நம் மகளிர் காவலர்களின் தீரமிகு முயற்சி வெல்லட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்