இனி டேட்டா கார்ட் தேவையில்லை..! இலவச வைஃபை..!
பொது இடங்களில் 10 ஆயிரம் வை-ஃபை ஹாட்ஸ்பாட்களை ஒரு மாதத்துக்குள் அமைக்க மத்திய தகவல்தொடர்புத் துறை திட்டமிட்டுள்ளது.
ஏற்கெனவே கிராமப் பஞ்சாயத்துக்களில் வைஃபை ஹாட்ஸ்பாட்கான டெண்டர் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் மக்கள் கூடும் பொது இடங்களில் வைஃபை ஹாட்ஸ்பாட்கள் அமைக்க மத்திய தகவல்தொடர்புத்துறை திட்டமிட்டுள்ளதாக அத்துறைக்கான செயலாளர் அருணா சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.