உதய் மின்திட்டம்..அதிமுக தான் காரணம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.!

MK Stalin

அதிமுக ஆட்சி காலத்தில் கையெழுத்தான ‘உதய் மின்திட்டம்’ தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழகத்தில் வரும் ஒன்றாம் தேதி முதல் வணிகம் மற்றும் சிறு குறு நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. இது குறித்து நேற்று திருச்சியில் செய்தியாளர்கள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து இருந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், தற்போது மின்வாரியம் பிரச்சனைகளை சந்தித்து வருவதற்கு காரணம் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது உதய் மின் திட்டத்திற்கு அதிமுக அரசு கையெழுத்திட்டது தான் காரணம். அதிமுக ஆட்சியில் தான் மின்கடனமானது செங்குத்தாக உயர்ந்து இருந்தது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிமுக ஆட்சியின் போது தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வாக இருந்தது என கடுமையாக விமர்சித்து இருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

மேலும், வீட்டு இணைப்புக்கு எந்தவித கட்டண உயர்வும் இருக்காது. அதேபோல் இலவச மின்சார சலுகைகளும் தொடரும். வேளாண் பயன்பாடுகள், குடிசைகளுக்கு இலவச இணைப்புகள், 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகைகள் என அதில் எந்த மாற்றமும் இருக்காது.

மத்திய அரசின் விதிப்படி 4.7 விழுக்காடு மின்கடனத்தை அதிகரிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் தற்போது 2.12 விழுக்காடாக அதனை குறைத்து. அந்த தொகையையும் மானியமாக அரசு ஏற்றுக்கொண்டு உள்ளது. எனவே, வீடு இணைப்புகளுக்கு எந்தவித கட்டண உயர்வும் நிச்சயமாக இருக்காது. வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே 13 முதல் 21 பைசா வரை உயர்வு இருக்கும் என மின் கட்டண உயர்வு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்