மாதம் ரூ.15,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..! 12th முடித்திருந்தால் போதும்..உடனே விண்ணப்பிங்க..!

AAICLAS

AAICLAS நிறுவனம் காலியாக உள்ள பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலிட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட் (AAICLAS), அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தேவை மற்றும் செயல்திறன் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு நிலையான கால ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணிகண்டங்களை நிரப்ப ஆற்றல் மிக்க விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

பதவி:

AAICLAS நிறுவனம், பாதுகாப்பு ஸ்கிரீனர் பணியில் காலியாக உள்ள 60 பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் Notification அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.

வயது:

பாதுகாப்பு ஸ்கிரீனர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு Notification அறிவிப்பை அணுகவும்.

தகுதி:

  • பாதுகாப்பு ஸ்கிரீனர் பணிக்கு விண்ணப்பிப்பவர் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து 12வது அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  • செல்லுபடியாகும் BCAS ஸ்க்ரீனர் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
  • ஆங்கிலம், ஹிந்தி மற்றும்/அல்லது உள்ளூர் மொழியைப் படிக்கும்/பேசும் திறன்.

விண்ணப்பிக்கும் முறை:

  • பாதுகாப்பு ஸ்கிரீனர் பணிக்கு விண்ணப்பிப்பவர் முதலில் AAICLAS -யின் www.aaiclas.aero அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில் இருக்கும் Notification அறிவிப்பை முழுவதுமாக படித்துவிட்டு, அறிவிப்பில் இருக்கும் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை சரியாக நிரப்ப வேண்டும்.
  • விண்ணப்பதாரர் இணைக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது விமான நிலைய இயக்குனர், இந்திய விமான நிலைய ஆணையம், SGRDJI விமான நிலையம், அமிர்தசரஸ்-143101 என்ற முகவரிக்கு உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும்.
  • தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்பட்ட தேதி, நேரம் மற்றும் இடத்தில் நேர்காணலுக்கு வர வேண்டும். மேலும், அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும்.

சம்பள விவரம்: 

பாதுகாப்பு ஸ்கிரீனர் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.15,000 சம்பளமாக வழங்கப்படும்.

கடைசி தேதி:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை ஜூன் 30ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். பரிந்துரைக்கப்பட்ட தேதிக்குப் பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்கள் எந்த வகையிலும் பரிசீலிக்கப்படாது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்